'நைட்டி'யில் இரவுப் பணி - 4 பெண் போலீஸார் உள்பட 9 பேர் சஸ்பெண்ட்!
சென்னை: இரவு நேரப் பணியில் இருந்த 4 பெண் போலீஸார் நைட்டியுடன் இருந்ததைப் பார்த்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அதிர்ச்சி அடைந்தார். அவர்களும், மது போதையில் இருந்த 5 ஆண் போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் தலைமையில் 3 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் மற்றும் 7000 போலீசார், 500 ஆயுதப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னையில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இதற்காக மாநகரில் 500 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இரவு 10 மணிக்கு தொடங்கிய ரெய்டு அதிகாலை
4 மணி வரை நடந்தது.
இந்த சோதனையில் 150 பழைய குற்றவாளிகள், 50 ரவுடிகள், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட 50 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 100 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை மற்றும் ஹெல்மெட் அணியாத 600 பேரும் பிடிபட்டனர்.
இதில் சிறு வழக்குகளில் பிடிபட்ட 100 பேர் ஆர்டிஓ முன் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த சோதனையில் 1250 பேர் சிக்கினர். அவர்களது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
நைட்டியில் இருந்த பெண் போலீஸார்
ரெய்டின்போது கமிஷனர் நாஞ்சில் குமரன் சென்னை முழுவதும் ரோந்து சென்றார். இரவு 10 மணிக்கு துறைமுகம் எதிரில் உள்ள கலெக்டர் அலுவலகம் சென்றார்.
அங்கு பாதுகாப்பு மகா மோசமாக இருந்ததைப் பார்த்து ஆணையர் அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு பிரவீனா, சவீதா, ஷீலா, சத்யா ஆகிய பெண் போலீஸாரும், பழனி, பன்னீர் செல்வம், பாரதி, மருதப்பன், யோவான் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பழனி தலைமைக் காவலர் ஆவார்.
ஆணையர் ரோந்து வந்தபோது, நான்கு பெண் போலீஸாரும் நைட்டியுடன் காணப்பட்டனர். பழனியைத் தவிர மற்ற நான்கு போலீஸாரும் தூங்கிக் கொண்டிருந்தனர். பழனியும் போதையில் தள்ளாடியபடி காணப்பட்டார். கையை சரியாகத் தூக்கி சல்யூட் கூட அடிக்க முடியாமல் சிரமப்பட்டார்.
காவலர்கள் இருந்த கோலத்ைதப் பார்த்து கோபமடைந்த ஆணையர் 9 பேரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். மேலும் பழனியைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி பழனி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நைட்டியில், இரவுப் பணியில் இருந்த பெண் போலீஸாரால் சென்னை காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications