கர்நாடகா: காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் 84க்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடக்க உள்ளது. வேட்பாளர்களின் பட்டியலை மாநில காங்கிரஸ் தயாரித்து தலைமைக்கு அனுப்பியது. நேற்று முன் தினம் இரவு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தலைமையில் பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் பிரசாரக்குழு தலைவர் சித்தராமையா வெளிநடப்பு செய்தார். பின்னர் அக்கட்சியின் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்து பேசிய சித்தராமையா பின்னர் சமாதானம் அடைந்தார்.
இந்நிலையில் மே 10ம் தேதி முதல் கட்டமாக நடக்க உள்ள 89 தொகுதிகளில் 84 தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 9 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவைப் போலவே, காங்கிரஸ் சார்பிலும் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. தமிழர்களின் வாக்குகள் அதிகம் உள்ள காந்தி நகரில் திணேஷ் குண்டுராவ் நிறுத்தப்பட்டுள்ளார். சிவாஜி நகரில் ரோஷன் பெய்க் நிறுத்தப்பட்டுள்ளார். சாந்தி நகரில் ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். கோலார் தங்க வயரில் சீனிவாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி












Click it and Unblock the Notifications