வீரப்பன் வழிபட்ட கோவிலில் சாமி கும்பிட பக்தர்களுக்கு தடை
மேட்டூர்: சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கத்திரிமலை மங்கம்மா கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் தடை விதித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கத்திரிமலை என்ற மலைகிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மங்கம்மா கோயிலில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன வீரப்பன் உயிரோடு இருந்தபோது அடிக்கடி வந்து வழிபாடு நடத்துவராம்.
இந்த கோயிலில் புரட்டாசி மாதத் திருவிழாவும், சித்ரா பௌர்ணமி கிரிவலமும் பிரசித்தம் என்பதால் வீரப்பன் தவறாமல் வந்து கும்பிடுவார்.
கத்தரிமலையில் இருளர் வகுப்பினர் பெரும்பான்மையாக குடியிருந்து வருகின்றனர். ஆனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கருங்கலூர், மேட்டுபாறையூர், காவேரிபுரம் கிராமத்தினர்தான் இந்த கோயில் விழாவை நீண்டகாலமாக நடத்திவந்தனர்.
தற்போது கத்திரிமலை வனப்பகுதி ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கோயில் விழாவை நடத்தும் உரிமையை இருளர்கள் கோரினர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தினர் இனி விழாவை நடத்தக்கூடாது என்றும் கூறினர்.
இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வருவாய்த்துறையினர் தலையிட்டு சமசரம் செய்ய முயன்றும் பலன் இல்லை.
இந்நிலையில் இன்று சித்ரா பௌர்ணமி என்பதால் அந்த கோயிலில் இருளர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதனால் மோதல் ஏற்படும் நிலை இருந்ததால் மங்கம்மா கோயிலில் பக்தர்கள் கிரிவலம் நடத்த அதிகாரிகள் தடை விதித்தனர்.
போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். வீரப்பன் கும்பிட்ட கோயில் என்ற ஆர்வத்தில் வந்தவர்களும், கிரிவலம் செய்ய வந்த பக்தர்களும் இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications