தலித் மக்களை தடுக்க சுவரில் மின்சாரம்!!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்கள் பிற சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க சுவர் எழுப்பப்பட்டு அதில் மின்சாரம் பாய்ச்சப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இப் பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வெ.சுந்தரம், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. நன்மாறன் ஆகியோர் மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில்,

கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தீண்டாமை கொடுமை பற்றி ஆய்வு செய்தபோது உத்தப்புரம் கிராமத்தில் வாழும் தலித் மக்கள், பிற சமூகத்தவர் வாழும் பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்வதை தடுக்க சுவர் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.

தலித் மக்களை தடுக்க எழுப்பப்பட்டுள்ள சுவரில் மின்சாரம் பாய்ச்சப்படும் அதிர்ச்சியூட்டும் தகவலும் கிடைத்துள்ளது. மின்சாரம் பாய்ச்சப்பட்டது பற்றிய விசாரணை நடத்தி உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலித் மக்கள் பிற பகுதிக்கு செல்லாமல் தடுக்க எழுப்பப்பட்டுள்ள சுவர் உடனே அகற்றப்பட வேண்டும். பொதுப்பாதையை தலித் மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

உத்தப்புரம் கிராமத்தில் இரு பகுதி மக்களிடமும் நிலவும் பதட்டத்தை உடனே அதை தணிக்க வேண்டும். மேலும் உடனே அமைதிக்குழுவை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+