அண்ணியைக் கற்பழித்துக் கொன்று கைதான கமல் ஷா மர்ம சாவு
புதுச்சேரி: புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பார்வதி ஷா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மைத்துனர் கமல் ஷா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
குஜராத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் ஷா, புதுச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரேம்சந்த் ஷாவின் மனைவி பத்மா ஷா. இவர்களுக்கு ரவி ஷா, கமல் ஷா ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
ரவி ஷாவுக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த பார்வதியைத் திருமணம் செய்து வைத்தனர். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியன்று வீட்டில் பார்வதி ஷா மட்டும் தனியாக இருந்தார். அப்போது கமல்ஷா, தனது அண்ணியைக் கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்தார்.
முதலில் திருடர்கள் வந்து அண்ணியைக் கொன்று விட்டதாக கமல்ஷா நாடகமாடினார். ஆனால் பார்வதி ஷாவின் சகோதரர்கள் இது கொலை என்று புகார் கூறவே போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் உண்மை தெரிய வந்தது.
இந்த வழக்கில் கமல்ஷா, பத்மா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரவி ஷா தலைமறைவாகி விட்டார். இன்னும் அவர் போலீஸ் கையில் சிக்கவில்லை.
ரவி ஷாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. பின்னர் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி ஷா அப்பீல் செய்தார். அதில் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கமல்ஷா. இந்த நிலையில் நேற்று தனது அறைக்கு அடுத்த அறையில் கமல் ஷா, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
ஸ்பூனை கூர்மையான கத்தி போல மாற்றி அவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் இது கொலையாக இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. கமல் ஷாவின் மார்பில் குத்தப்பட்ட காயங்களும், வடுக்களும் தெரிகின்றன. எனவே கைதிகளுடன் நடந்த மோதலில் அவர் அடித்தும், கழுத்தை அறுத்தும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications