மதுரை தேவர் சிலைக்கு 24 மணி நேர பாதுகாப்பு: கருணாநிதி
சென்னை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று தேவர் சிலை அவமதிப்பு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் கருணாநிதி பேசுகையில், தேவர் சிலைக்கு அருகே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். யாரும் சிலையின் அருகே செல்லாமல் தடுக்கப்படும்.
மதுரையில் நடந்த சம்பவம் வருத்தத்திற்குரியது. ஆனால் அந்த செயலை செய்தவர் ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் தேவர் பெருமகனாருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சில விஷமிகள் சிலையின் மதிப்பை அறியாமல், தலைவர்களின் உயரிய தன்மைகளை அறியாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு விடுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கும் பொருட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேவர் பெருமகனார் எளிமைக்குப் பெயர் போனவர். தனது சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்தவர். தேவர் மீது அண்ணா, காமராஜர் ஆகியோர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் என்றார் கருணாநிதி.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications