ஓடிடிக்கு வருது இதயம் முரளி.. அதுவும் எப்போது தெரியுமா? தியேட்டரில் மிஸ் பண்ணியவர்களுக்கு லக்!
சென்னை: காதல் படங்களை விரும்புபவர்களுக்கு காத்திருந்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதர்வாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒருதலைக் காதலால் தவித்துக் கொண்டிருக்கும் பலரும் எதிர்பார்த்த இதயம் முரளி திரைப்படம் விரைவில் ஓடிடிக்கு வர இருக்கிறது. அதுவும் எந்த தளத்தில்? எப்போது? என்று விரிவாக பார்க்கலாம்.
சினிமா தயாரிப்பாளராக இருந்த ஆகாஷ் பாஸ்கரன் இதயம் முரளி படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஜூலை 10ஆம் தேதி வெளியான இந்த படம் ஒரு இளைஞனின் ஒருதலை காதல், குடும்பம், நட்பு போன்ற பல எமோஷனலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அதர்வாவுடன், பகத்பாஸில், ப்ரீத்தி முகுந்தன், ககயோடு லோஹர், ரக்ஷன், நிஹாரிகா, டிராவிட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு தமன் தான் இசையமைத்திருக்கிறார். 20 வருஷத்துக்கு பிறகு நடிகராகவும் இந்த படத்தில் தமன் களம் இறங்கி இருக்கிறார்.
படத்தின் பிளஸ்
இந்த படம் வெளியான போது விமர்சர்களிடம் கலவையான ரியாக்சனை பெற்றது. ஆனாலும் இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களிடம் படிப்படியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக அதர்வாவின் இயல்பான நடிப்பு பகத் பாஸில் கெஸ்ட் ரோல், தமனின் இசை போன்றவை படத்திற்கு பலமாக இருக்கிறது. வசூலிலும் மெல்ல மெல்ல படம் முன்னேறி வருகிறது.

இதயம் பட வசூல் நிலவரம்
முதல் வாரத்தை தொடர்ந்து 2வது வாரத்தின் இறுதியில் வசூலில் முன்னேற்றம் கண்டது. அதிலும் இந்தியாவில் மட்டும் சுமார் 17.85 கோடி வசூல் செய்ததாகவும், உலக அளவில், 25 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல அதர்வா ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டி வரும் நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. மறைந்த நடிகர் முரளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதயம் என்ற பெயரை நினைவுப்படுத்தி இந்த படம் வைக்கப்பட்டிருக்கிறது. பேட்டிகளில் கூட இந்த படம் என் அப்பாவுக்கான மரியாதை என்று அதர்வா சொல்லி இருந்தார்.

இதயம் ஓடிடி அப்டேட்
சரி ஒரு இது ஒரு பக்கம் இருந்தாலும் எப்பதான் இந்த படம் ஓடிடிக்கு வரும்? எங்களால தியேட்டர்ல போய் பார்க்க முடியலையே என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தான் இப்போ ஒரு ஸ்வீட்டான அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது இதயம் முரளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் நேற்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலரால் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லை என்றாலும் இனி ஓடிடியில் பார்த்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
