சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கு.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ், கொலை வழக்கில் 9 பேருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரும் வழக்கில் தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகள் தரப்பு உயர் நீதிமன்றக் கிளையில் செய்த முறையீட்டு வழக்கின் விசாரணையில் இன்று சிபிஐ தரப்பு வழக்கின் பின்னணி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தது. இதனை அடுத்து விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது விசாரணைக்காக அங்குள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் போலீஸ் கஸ்டடியில் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Sathankulam Case

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை நீதிமன்ற உத்தரவின் அரிப்படையில் சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் மாதம் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து ஏப்ரல் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை உறுதிச் செய்யக்கோரி சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதிகள் ஜெகதீஸ், சந்திரா பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்பது பேரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 பேருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரும் வழக்கு, தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகள் தரப்பு உயர் நீதிமன்றக் கிளையில் செய்த முறையீட்டு வழக்கின் விசாரணையில் இன்று சிபிஐ தரப்பு வாதம் நடைபெற்றது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் பின்னணி உள்ளிட்ட விபரங்களை இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்தார். இதனையடுத்து, தொடர்ந்து வாதங்களுக்காக விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+