இந்தியா: சீன ஒலிம்பிக்சுக்கு இதுவரை 28 பேர் தகுதி
டெல்லி: சீனாவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் இதுவரை 28 வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் நேற்று கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கில் கூறியதாவது:
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 28 வீளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு 9 வீரர்கள், தடகளம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு தலா 5 வீரர்கள், வில்வித்தையில் 4 பேர், மல்யுத்தம் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிக்காக தலா 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதுதவிர ஒரு நீச்சல் வீரரும் தகுதி பெற்றுள்ளார்.
இன்னும் மற்ற போட்டிகளுக்கு நடக்கும் தகுதிச் சுற்றுகள் அனைத்தும் முடிந்த பிறகுதான் எவ்வளவு பேர் தேர்வு பெற்றுள்ளனர் என்பதைக் கூறமுடியும்.
சிறந்த வீரர்களை உருவாக்குவதற்குத் தேவையான பயிற்சி முகாம்கள், விஞ்ஞானபூர்வ உபகரணங்கள் வழங்குதல், வெளிநாட்டு பயிற்சியாளர் வசதி ஆகியவற்றை தேசிய விளையாட்டு சம்மேளனத்தின்மூலம் வழங்க இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் உதவி வருகிறது.
பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்களை அமர்த்தி இந்திய அரசு சிறப்பு பயிற்சியை வழங்குவது குறிப்பிடத்தக்கது என்றார் கில்.
சீனா மிரட்டலா?:
மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், டெல்லியில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை நடத்தக்கூடாது என்று சீன அரசு நிர்பந்திக்கவில்லை. ஜோதி ஓட்டத்தின் பாதையை இந்திய ஒலிம்பிக் சங்கம்தான் தீர்மானித்தது என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications