போலீஸ் பிடியிலிருந்து கஞ்சா கைதி தப்பியோட்டம்
ராஜபாளையம்: ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கஞ்சா கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடினார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் பிஎஸ்கே மாலையாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரை கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கருப்பசாமி உள்பட முத்துகுமார், கோபாலகிருஷ்ணன், சோமசுந்தரம் ஆகிய கைதிகளை அழைத்து செல்லப்பட்டனர். போலீஸ்காரர்கள் நடராஜன், இருளாண்டி, தேவப்பிரியா ஆகியோர் உடன் சென்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மதியம் சாப்பிடுவதற்காக நேரு சிலை அருகே உள்ள ஹோட்டலுக்கு கைதிகள் 4 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டனர். அப்போது கருப்பசாமி, போலீசார் பிடியிலிருந்து தப்பியோடினார்.
அவரை விரட்டிச் சென்றும் போலீசாரால் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கருப்பசாமியை பிடிக்க ராஜபாளையம் டிஎஸ்பி முருகேசன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications