த.மா.கா.வை ஆரம்பிக்க கோரி வாசன் ஆதரவாளர்கள் போஸ்டர்!
Subscribe to Oneindia Tamil

கோவையில் காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சமீபத்தில் ஜி.கே.வாசன் ஆதரவு நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுதான் காரணம் என வாசன் ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், கோவையில் புதிதாக முளைத்துள்ள போஸ்டர் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர 8வது வட்ட காங்கிரஸ் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'தன்மானம் தலைவராகிய நீ இருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் உன் வழி நடக்க, மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை உதயமாக்கிடு தலைவா' என்று கூறப்பட்டுள்ளது.
ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்களால் காங்கிரஸார் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications