ஐ.நா பாதுகாப்பு சபை-இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு

லண்டனில் 'லேபர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் சார்பில் தரப்பட்ட விருந்தில் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்திய பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஜி-8 கூட்டமைப்பில் இந்தியாவும் இடம்பெறவேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும்.
அதேசமயத்தில் (ஐக்கிய நாடுகள் சபை) பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடமில்லையென்றால் இன்றைய சூழ்நிலையில் அந்த கவுன்சிலுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.
உலகமயமாக்கலினால் ஏழை நாடுகள் பயனடையும்வகையில் இப்போதுள்ள சர்வதேச அமைப்புகளை சீரமைத்து புதிய சில அமைப்புகளை தோற்றுவிக்க வகை செய்யும் உலகளாவிய புதிய கூட்டணியில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளுக்கும், ஏழைநாடுகளுக்கும் இடையிலான இந்த புதிய கூட்டணியினால் பல கோடி ஏழை மக்களின் வறுமை ஒழிப்பு, எல்லா குழந்தைகளுக்கும் கல்வி, தொற்று நோய்களை ஒழித்தல் ஆகியவை உறுதி செய்யப்படும்.
எனது இந்த கருத்துக்கு இந்தியாவில் ஆதரவு இருக்கும் என்று தெரியும். லேபர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்புமூலம் ஒன்றைத் தெளிவு படுத்தவேண்டும். நம் இருநாட்டினருக்கும் இப்போதுள்ள நல்லுறவு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
எனது பதவிக்காலத்தில் இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவேன். இந்த உறவின்மூலம் நம் இரு நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் பெரும் நன்மை ஏற்படும்.
உலகமயமாக்கலின் பலனை அனைத்து தரப்பு மக்களும் பெறச்செய்வதற்கான முயற்சிக்கு இதுவே நல்ல தருணம். சர்வதேச அமைப்புகளை சீரமைப்பதில் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்கிறேன் என்றார் பிரவுன்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications