ஒலிம்பிக் சுடர் ஓட்ட கெடுபிடியால் பலியான தமிழக அதிகாரி
டெல்லி: டெல்லியில் ஒலிம்பிக் ஜோதி ஓட்ட பாதுகாப்பு கெடுபிடியினால், மாரடைப்பு ஏற்பட்ட அரசு அதிகாரி ஒருவர் உடனடி சிகிச்சை பெறமுடியாமல் பலியானதாக சமாஜ்வாதி எம்.பி. ஜெயாபச்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜ்யசபாவில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த எம்.பி. ஜெயாபச்சன் கூறியதாவது:
டெல்லியில் சமீபத்தில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்தது. அன்றைய தினத்தில் சென்னையை சேர்ந்த தேசிய தகவல் மைய உயர் அதிகாரி டெல்லி வந்திருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், வழியில் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக அவரது ஆம்புலன்ஸ் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் அந்த அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒலிம்பிக் ஜோதி பாதுகாப்பாக சென்றடைய வேண்டும் என்று விதிக்கப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகளினால் அநியாயமாக ஓர் உயிர் பிரிந்துள்ளது கண்டிக்கத்தக்கது.
விமான நிலையத்திலேயோ அல்லது உரிய நேரத்திலோ அந்த அதிகாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அரிதான அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும்.
இதுபோன்ற அவசரகால நிலைகளில் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு வேண்டிய வசதிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறையினரும், விமானப் போக்குவரத்துத் துறையினரும் செய்ய வேண்டியது அவசியம்.
ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரு ஸ்டேடியத்தில் வைத்துக் கொண்டால் நல்லது என்றார் ஜெயாபச்சன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications