தீயில் கருகிய விடைத் தாள்கள்- மீண்டும் தேர்வு இல்லை

சட்ட சபையில் 110வது விதியின் கீழ் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியதாவது:
மார்ச்- 2008 இடைநிலை, மெட்ரிக் பொதுத் தேர்வு முடிந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த 19ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 74 மையங்களில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மையத்திலும் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்த்து 5 பாட விடைத் தாள்கள் மதிப்பீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் 24ம் தேதி இரவு 10.30 மணி அளவில் வேலூர் ஊரிஸ் மேல் நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் முகாமில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி பெறப்பட்டதும் அரசுத் தேர்வுகள் இணை இயக்குனர் (மேல்நிலை) மற்றும் துணை இயக்குனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்து குறித்து நேரில் பார்வையிட்ட அறிக்கையினை அனுப்பி உள்ள தன் அடிப்படையில் அவை முன் வைக்கிறேன்.
24ம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு விடைத் தாள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு விடைத்தாள் அறையில் பூட்டி அரக்கு சீலிடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பில் முகாம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரவு சுமார் 9.30 மணிக்கு பூட்டி சீலிடப்பட்ட அறையில் இருந்து புகை வந்ததை காவலில் இருந்த போலீசார் மற்றும் பள்ளி இரவு காவலர் கவனித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக தீ அணைப்பு வீரர்கள் வந்து அறைக் கதவினை சிறிது உடைத்து தண்ணீர் பீய்ச்சி தீயை அணைத்துள்ளனர்.
எதிர்பாராத வகையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டாலும், நல்ல வேளையாக, அங்கு வைக்கப்பட்டிருந்த பல பிரிவு விடைத்தாள்களும் எரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டு விட்டது.
ஆனால், ஆங்கிலம் 2ம் விடைத்தாள்கள் இருந்த பகுதி மட்டும் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. பிற விடைத்தாள்கள் பாதிக்கப்படவில்லை. தீயினால் பாதிக்கப்பட்ட விடைத் தாள்கள் விழுப்புரம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவை ஆகும்.
இந்த தீ விபத்து குறித்து காவல் துறை மற்றும் வல்லுநர்கள் தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளதால் சேதம் அடைந்த விடைத்தாள்கள் விவரம் விசாரணைக்கு பின்னர் தெரியவரும்.
இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடைபெற்ற போது அரசுத் தேர்வுத் துறை வழக்கமாக கடைபிடித்து வரும் நடைமுறையைப் பின்பற்றி மாணவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட விடைத்தாளுக்குரிய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications