விலை உயர்வு: அரசியலாக்குவதா?-பாஜகவிற்கு வாசன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:விலை உயர்வு பிரச்னையை பாஜக அரசியலாக்கி வருவதாக மத்திய இணையமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்தார்.
காரைக்குடியில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், காங்கிரஸ் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் கட்சியாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் கட்சியாகவும் உள்ளது.
தமிழகத்தில் தொண்டர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப முடிவு எடுக்க அகில இந்திய தலைமைக்கு தெரிவித்துள்ளேன். விலைவாசி உயர்வு என்பது உலக அளவில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. இதை பாஜக அரசியலாக்க கூடாது.
பாஜகவின் இந்த செயல் கண்டிக்கதக்கது. மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications