கள்ளத் துப்பாக்கி வியாபாரி கைது- நக்ஸல்களுக்கு சப்ளை?
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கள்ளத் துப்பாக்கியை தயாரித்து விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 5 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் சரவணாபுரம் அருகே பச்சைமலை அடிவாரத்தில் ரகசியமாக கள்ளத் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்திய தனிப்படை போலீசார், கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலையை கண்டுபிடித்தனர்.
அங்கு திருட்டுத்தனமாக துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தேவதாஸ் (47) என்பவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் விற்பனைக்கு தயாராக மறைத்து வைத்திருந்த 5 புதிய கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்.
இதேபோல் கள்ளத் துப்பாக்கி தயாரித்ததாக கடந்த 1997ல் தேவதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள தேவதாஸுக்கு, தமிழகத்தில் இயங்கிவரும் தீவிரவாதிகள் மற்றும் நக்ஸலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications