கைதான அதிமுகவினருக்கு சிபாரிசு செய்த திமுக பிரமுகருக்கு டோஸ்
கரூர்: கரூர் மாவட்டத்தில் போலி மது சப்ளை செய்த அதிமுக நிர்வாகிகளை விடுவிக்கும்படி சிபாரிசு செய்த திமுக பிரமுகரை அக்கட்சியின் 'இளைய தலைவர்' வறுத்தெடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை தொடர்பாக திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் தலைமையில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. தாந்தோனிமலையில் உள்ள ஒரு தோட்டத்தில் 576 போலி மதுபானங்கள், கார், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் தானேஷ், நகர மாணவர் அணி அமைப்பாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா, தாந்தோணி நகர செயலாளர் ராயனூர் ரவி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் முத்துகுமார், ராமலிங்கம், சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளை பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது கரூர் மாவட்ட திமுகவைச் சேர்ந்த பவர்புல் பிரமுகர் ஒருவர் அதிமுகவினரை விடுதலை செய்யும்படி போலீசாரிடம் போனில் கூறியுள்ளாராம்.
இதையறிந்த திமுகவின் முக்கிய மாவட்ட நிர்வாகி டென்ஷனாகிவிட்டாராம். உடனே போலீசாருக்கு போன் செய்து அதிமுகவினரை விடுவிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார். ஒரே கட்சியைச் சேர்ந்த 2 பெரிய தலைகளிடம் சிக்கிக் கொண்டு செய்வதறியாது விழிக்கின்றனர் போலீசார்.
இந்த சிபாரிசு குறித்து கட்சியின் 'இளைய தலைவரிடம்' போட்டுக் கொடுத்துவிட்டார் டென்ஷனான நிர்வாகி. இதை கேட்டு கொதித்து போன அந்த தலைவர், சிபாரிசு செய்த பிரமுகருக்கு போனிலேயே டோஸ் விட்டு வறுத்தெடுத்துவிட்டாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications