கோடையின் மின்தடை இருக்காது-ஆற்காடு உறுதி
சென்னை: கோடையில் மின் தடை ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் சட்டசபை அதிமுக தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,
உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட விளக்க அறிக்கையில் 800 மெகா வாட் மின்சாரம் தட்டுப்பாடு இருப்பதாகவும், இது 1,300 மெகாவாட்டாக அதிகரிக்கலாம் என்றும் மின்சக்தி துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் மின்சாரத்துறை அமைச்சர் முன்பு பேசியபோது மின் பற்றாக்குறை இல்லை என்று கூறினார். இது முரண்பாடாக இருக்கிறது. உண்மை நிலையை அறிய விரும்புகிறேன் என்றார்.
அதற்கு பதிலளித்த வீராசாமி,
மின் பற்றாக்குறை இல்லை என்று நான் சொல்லவில்லை. மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் வாங்குவோம் என்று கூறினேன். மார்ச் மாதம் மழை பெய்ததால் விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்துவது 1,000 மெகா வாட் வரை குறைந்தது
வழக்கமாக ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகுதான் காற்று வீசும். ஆனால் நல்ல செய்தியாக 27ம் தேதி மாலை 3 மணிக்கு மேல் காற்றுவீச தொடங்கிவிட்டது. இதனால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாக துவங்கிவிட்டது.
இதனால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் மின்தடை இல்லை. ஒருவேளை ஏதாவது குறைபாடு ஏற்பட்டாலும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் மின் தடை இருக்காது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications