எம்.பிக்கள் அமளி - சோம்நாத் கோபம்- டிவி 'லைவ்' கட்!
டெல்லி: எம்.பிக்கள் செய்த அமளியால் பெரும் கோபமடைந்த லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, லோக்சபா விளக்குகளை அணைக்க உத்தரவிட்டார். இதனால் டிவியில் எம்.பிக்களின் அமளியை நேரடியாக ஒளிபரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
லோக்சபாவில் நேற்று கேள்விநேரத்தின்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது குடும்பத்தினருக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக பிரமதர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி பாஜக, ஐக்கியஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களை அமருமாறு பலமுறை சோம்நாத் சாட்டர்ஜிகூறியும் அவர்கள் அடங்கவில்லை. இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. உறுப்பின்களின் போக்கால் கோபமடைந்த சோம்நாத் சாட்டர்ஜி, லோக்சபா விளக்குகளை அணைக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. சிறிய அளவிலான விளக்குகள் மட்டும் எரிந்தன. இதனால் அவையே இருளில் மூழ்கியது போல காணப்பட்டது. இதன் காரணமாக டிவி நேரடி ஒளிபரப்பு சில நிமிடம் பாதிக்கப்பட்டது.
பத்து நிமிடங்கள் கழித்து சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில், உறுப்பினர்களின் போக்கு கண்டனத்துக்குரியது. இவர்கள் செய்யும் அமளிகளயெல்லாம் நாட்டு மக்கள் பார்த்தால் நாடாளுமன்றம் குறித்து தவறாக எண்ணுவார்கள். அதனால்தான் விளக்குகளை அணைக்கக் கூறினேன்.
நான் அவையை ஒத்திவைக்க மாட்டேன். சபாநாயகரின் பேச்சை மதிப்பதில்லை என்ற போக்கை சில உறுப்பினர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது வருத்தத்திற்குரியது என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications