வங்கக் கடலில் நர்கீஸ் புயல்-கன மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. பல பகுதிகளில் 100 டிகிரியைத் தொட்டு வெயில் வாட்டி வருகிறது. கத்திரி வெயிலும் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. நர்கீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் சின்னம், வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று காலை 8.30 மணியளவில் புயல் சின்னம் சென்னைக்குக் கிழக்கே 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. பிற்பகலில் இது கரையிலிருந்து 450 கி.மீ. தொலைவை நெருங்கியது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடலோர பகுதிகளில் 60 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும். கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும்.
இதையடுத்து சென்னை, கடலூர், நாகப்பட்டிணம் துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கைக் கூண்டும், பாம்பன், தூத்துக்குடியில், 2ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.
புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். தமிழகத்தின் வட பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலின் தற்போதைய போக்கின்படி அது நாகப்பட்டிணம், ஓங்கோல் இடையே கரையைக் கடக்கக் கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னத்தால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications