பிற்படுத்தப்பட்டோர் ஸ்காலர்ஷிப்-வருமான வரம்பு அதிகரிப்பு
சென்னை: பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை ரூ.1 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மேலும் சிறுபான்மையின வகுப்பு மாணவர்களுக்கு 3 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்தார். அதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதார சிரமமின்றி கல்வி பெற வசதியாக கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6வது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் இத்தகைய மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் இருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பெற்றோரின் வருமான உச்சவரம்பு ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். வரும் கல்வியாண்டில் இருந்து சிறப்புக் கட்டணமும் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் உடனடி வேலை வாய்ப்புக்குரிய 5 ஆண்டுகளுக்கு மிகாத படிப்புகளை படிக்கும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.
தமிழ்நாடு சிறுபான்மைனர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 3 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications