குஷ்பு மீதான 'கற்பு' வழக்குகள்: தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

கடந்த ஆண்டு 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை குஷ்பு, தமிழ்ப் பெண்கள் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும், கல்யாணத்திற்கு முந்தைய உறவில் தவறில்லை, ஆனால் அதில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று பேசினார்.
இதையடுத்து பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் அமைப்புள் உள்ளிட்டவை குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. குஷ்புவின் பேச்சு தமிழ்க் கலாச்சாரத்தை இழிவு செய்வதாகவும், தமிழ்ப் பெண்களின் கற்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக அவை போர்க்கொடி உயர்த்தின.
குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. வழக்குகளும் சரமாரியாக தொடரப்பட்டன. பல்வேறு ஊர் கோர்ட்டுகளிலும் குஷ்பு மீது மொத்தம் 26 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி குஷ்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி தனது தீர்ப்பில் கூறுகையில், குஷ்பு சொன்ன கருத்துக்கள் என்ன நோக்கத்தில் சொல்லப்பட்டது, எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அதற்கு சாட்சி விசாரணையின்போதுதான் விடை கிடைக்கும். எனவே வழக்குகளைத் தள்ளுபடி செய்யாமல் விசாரிக்க வேண்டியது அவசியம்.
கோர்ட் உத்தரவினால் கைது செய்யப்படாமல் இருக்க விதி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு விதி விலக்கு அளிக்கும்போது இந்த விஷயம் பற்றி ஏதும் பேசக் கூடாது என்று மாஜிஸ்திரேட் கோர்ட் நிபந்தனை விதித்தது. ஆனால் அந்த நிபந்தனையை அவர் கடைப்பிடிக்க தவறிவிட்டார். மேலும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் இழிவாகப் பேசி பேட்டி அளித்துள்ளார். இதுபோன்ற பேசும்போது அவர் நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டார்.
பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும், பேச வேண்டும் என்பதில்லை. இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்தியப் பண்பாடு, தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராக மோசமாக, அவதூறான கருத்துக்களை ஒருவர் தெரிவிக்கும்போது, அதனால் பாதிக்கப்படும் நபர் இந்தக் கருத்துக்களினால் தான் புண்பட்டுவிட்டதாக புகார் தரும்பட்சத்தில், அதை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. அதேசமயம், வழக்கின் தன்மை குறித்தும், சூழ்நிலை குறித்தும் ஆராய வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. மாஜிஸ்திரேட் வழக்கு தொடர்பாக விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்த பிறகும், குஷ்பு கட்டுப்பட்டு இருக்க முடியவில்லை.
இவர் மீது வெவ்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே எல்லாவற்றையும் சேர்த்து விசாரிக்கலாம். ஆகவே இந்த வழக்குகள் அனைத்தும் எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். அதை 6 மாதத்திற்குள் எழும்பூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications