கறவை மாடுகளுக்கு கம்ப்யூட்டர் 'டேக்'!
சென்னை: தமிழகத்தில் உள்ள 9 லட்சம் கறவை மாடுகளுக்கும் கம்ப்யூட்டர் எண் கொண்ட 'டேக்' (tag) மாட்டப்படும் என தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கால்நடைத்துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். அதன் விவரம்:
- கால்நடை ஆய்வாளர்களின் பதவிக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, 888 முதலாம் நிலை கால்நடை கிளை நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அவற்றில் பட்டம் படித்த, கால்நடை உதவி மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர்.
- தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முதன் முறையாக தமிழகத்தில், இனவிருத்திக்கு உகந்த மாடுகளின் இருப்பிடங்களைக் கண்டறிய, ரூ. 1.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒன்பது லட்சம் மாடுகளுக்கு கம்ப்யூட்டர் எண் கொண்ட டேக் மாட்டப்படும்.
இதன் மூலம், மாடுகளின் உடல் நலம், சினைப்பிடிப்பு விகிதத்தை கண்காணித்து, உற்பத்தி திறனை உயர்த்த முடியும். இத்திட்டம் வரும் ஜூன் மாதம் துவக்கப்படும்.
- கால்நடை பல்கலைக்கழகத்தில் புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கூட்டு உடன்படிக்கை செய்துள்ளது. அதேபோல, அமெரிக்காவின் வெர்ஜினியா மேரிலேண்ட் மண்டலக் கால்நடை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மீனவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு:
மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி வெளியிட்ட அறிவிப்பில்,
ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் 'ஸ்மார்ட் கார்ட்' வழங்கும் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும். சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டிச் செல்லும் மீனவர்களையும், காணாமல் போகும் மீனவர்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் உதவும்.
தமிழகத்தில் சென்னையில் இரண்டு இடங்களிலும், மதுரையில் இரண்டு இடங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும் நவீன மீன் விற்பனை நிலையங்கள் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மீன் வளர்ப்போருக்கு கல்வி சுற்றுலா, மீன்வளத் துறை விரிவாக்க மையங்களை மேம்படுத்துதல், மீன்விதைப் பண்ணைகளை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல், ஆறுகளில் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் வளர்ப்பு, தஞ்சை நெய்தலூரில் மீன் குஞ்சுகளை கூடுதலாக உற்பத்தி செய்து வளர்த்தல், கிருஷ்ணகிரியில் மீன் குஞ்சு உற்பத்தி பண்ணையினை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications