கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு-கருத்து கணிப்பு

கர்நாடக மாநில தேர்தல் வரும் 10, 16, 22 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக நடக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் சிஎன்என்-ஐபிஎன் செய்தி தொலைகாட்சி, டெக்கான் ஹெரால்டு செய்திதாள் மற்றும் சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு நிறுவனம் சேர்ந்து கர்நாடக தேர்தல் குறித்த கருத்து கணிப்பை நடத்தியது.
5,124 பேரிடம் நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 114 இடங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பாஜவுக்கு 60 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிகிறது. தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாம்.
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 49 இடங்களிலும், பாஜக 19 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் சதவீத அடிப்படையில் காங்கிரஸ் 39 சதவீதம் வாக்குகள் பெறக்கூடும். பாஜக 28 சதவீதமும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 சதவீதமும் மற்ற கட்சிகள் 13 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சி 224 தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் வெறும் 2 சதவீத வாக்குகளே பெறும் என்று தெரிகிறது.
மக்களிடம் பிரபலமாக உள்ள முதல்வர் வேட்பாளர்களில் பாஜக சார்பில் எடியூரப்பாவுக்கு 27 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக குமாரசாமிக்கு 22 சதவீத வாக்காளர்களும் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு 16 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.
பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி நிலவுகிறது. பாஜக மூன்றாம் இடத்தில் தான் உள்ளது.
மத்திய கர்நாடகா, கடலோர பகுதி, ஆந்திர எல்லைகளில் உள்ள தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
லிங்காயத்து சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் வட கர்நாடகத்திலும் மகாராஷ்டிர எல்லை பகுதியில் உள்ள தொகுதிகளில் பாஜக முன்னணி வகிக்கிறது.
காங்கிரசுக்கு பரவலாக பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினரின் ஆதரவு உள்ளது.
பாஜகவுக்கு லிங்காயத்துகள், முற்பட்ட சமூகத்தினரிடம் அதிக செல்வாக்கு உள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒக்கலிகா சமுதாயத்தினரின் ஆதரவு உள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications