வைஷ்ணவ தேவி யாத்ரீகர்ளை சுமந்து செல்பவர்களுக்கு வரி- எம்.பிக்கள் எதிர்ப்பு
டெல்லி: வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் யாதிரீகர்களை முதுகில் சுமந்து செல்பவர்களுக்கு ரூ.33 வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு நாடாளுன்றத்தில் எம்.பிக்கள் கடும் அதிருப்தியும், கவலையும் தெதரிவித்னர்.
இமயமலையில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த யாத்திரையின் போது மலைப்பகுதிகளில் நடக்க முடியாத பக்தர்களை 'பித்துவாலா'க்கள் என்று அழைக்கப்படும் தொழிலாளர்கள் தங்களது முதுகில் சுமந்து வைஷ்ணவதேவி கோவிலுக்கு எடுத்துச் செல்வதும் உண்டு.
இந்த பணியில் சுமார் 17,000 பித்துவாலாக்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு யாத்ரீகரை முதுகில் சமந்து செல்ல ஒரு பித்துவாலாவிற்கு ரூ.162 கூலி. இந்த தொகையில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி ரூ.33. இதனால் ஏழை பித்துவாலாக்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
இவர்களின் பரிதாப நிலை குறித்து லோக்சபாவில் காங்கிரஸ் உறுப்பினர் லால்சிங் பிரச்சனை கிளப்பினார். கேள்வி நேரம் முடிந்த பிறகு லால்சிங் பேசுகையில், பித்துவாலாக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ரூ.33 வரியை குறைக்க வேண்டும்.
பித்துவாலாக்களின் வாழ்க்கை நிலை பரிதாபமாக உள்ளது. இந்த நிலையில் வைஷ்ணவதேவி கோயில் யாத்திரீகர்களை கொண்டு செல்ல ஹெலிகாப்டர் மற்றும் பேட்டரி கார் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்
யாத்ரீகர்களை சுமையாக தூக்கி செல்லும் பித்துவாலாக்களுக்கு மேலும் சுமையாக ரூ. 33 வரி விதிக்கப்பட்டுள்ளது. பித்துவாலாக்களுக்கு வைஷ்ணவதேவி கோயில் விடுதிகளிலோ, ஓய்வு அறைகளிலோ தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் இரவு நேரங்களில் வெட்ட வெளியில் தங்கி மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
எனவே பித்துவாலாக்கள் மீது ரூ. 33 வரியை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் எம்.பி.யின் இந்த கோரிக்கைக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தனர். மேலும் வரி செலுத்தியது போக மீதம் கிடைக்கும் தொகையிலும் பித்துவாலாக்களை காண்டிராக்ட் எடுத்து இருக்கும் பல்கிவாலாக்கள் ரூ.9யை பிடுங்கி கொள்கிறார்கள். இதற்கு மத்திய அரசு சரியான தீர்வு ஒன்றை காண வேண்டும் என்றும் லால்சிங் கேட்டுக் கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications