ஹஜ் புனிதப் பயணம்- விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை: இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஹஜ் கமிட்டியிடம் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசின் அறிவிப்பில், இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம்கள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவில் விண்ணப்பிக்கலாம்.
புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), ரோஸி டவர், 3ம் தளம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெறலாம்.
சென்னையில் மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு பெயரில் ரூ.100கான டிடி, கொடுத்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
தபால் மூலமும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் கோரும் கோரிக்கைகளை, விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் டிடி எடுத்து சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு குழு, உறையில் 6 விண்ணப்பங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், போட்டோக்கள் மற்றும் நபர் ஒன்றுக்கு, அந்நிய செலாவணி முன்பணம் மற்றும் பலவகை கட்டணங்களுக்காக ரூ.10,700 தொகையை பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்பு கணக்கு எண்.30361856116ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் மாநில ஹஜ் குழுவில் மே 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications