தமிழகத்தில் 'ஆட்சியில் பங்கு': இளங்கோவன் அலுப்பு!
தூத்துக்குடி: தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் என்பது முடிந்து போன கதை என தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக இருந்தால் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள். தலைவர்களுக்குள் தான் கருத்து வேறுபாடு உள்ளது. இதுவும் விரைவில் தீர்ந்து விடும். விரைவில் என்றால் எப்போது என்பதை நிருபர்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறேன் என்றார்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் என்பது முடிந்து போன கதை. இந்தியா முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளது.அதே சமயம் இந்த பிரச்சனையை எதிர்கட்சிகள்தான் பெரிது படுத்தி வருகின்றன. இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஏற்படுள்ளது.
குறிப்பாக பெட்ரோலிய பொருட்கள் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு ஒரு பேரல் 40 டாலராக இருந்தது. தற்போது 130 டாலராக உயர்ந்துள்ளது. மத்திய அரசு விலைவாசியை கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
கட்டுமான பொருட்களான சிமிண்ட், இரும்பு கம்பி உள்ளிட்டவைகளின் விலையை கட்டுபடுத்த மத்திய அமைச்சர் சிதம்பரம் திட்டம் அறிவித்துள்ளார். அதேபோல் உணவு பொருட்களின் விலையை குறைக்கவும், குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு போன்றவற்றின் விலைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற உணவு பொருட்களை பதுக்கி வைப்பவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் முதல்வர் இதுசம்பந்தமான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உணவு பொருட்களை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு வரும் பார்லிமெண்ட் தேர்தலில் எங்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. விலை வாசி உயர்வு என்பது நிரந்தரம் அல்ல என்றார் இளங்கோவன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications