பெரம்பலூரில் ரூ.900 கோடியில் டயர் தொழிற்சாலை
சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.900 கோடியில் புதிய டயர் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
எம்.ஆர்.எப். நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து இந்த தொழிற்சாலையை அமைக்கவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் டிட்கோ தலைவர் மற்றும் எம்.ஆர்.எப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேமன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தத் தொழிற்சாலை ரூ.900 கோடியில் உருவாகிறது. 7000 பேருக்கு இத்தொழிற்சாலை மூலம் வேலை கிடைக்கும்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேமன் பேசுகையில், தமிழகத்தில் உள் கட்டமைப்பு அமைப்புகள் சிறப்பாக இருப்பதால் எங்கள் நிறுவனம் 3வது தொழிற்சாலையை இங்கு அமைத்துள்ளது.
இத்தொழிற்சாலையில் முதல் கட்டமாக 3 லட்சம் ரேடியல் டயர்களும், அடுத்ததாக ஒவ்வொரு மாதமும் 7 லட்சம் டயர்களும் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications