உத்தமபுரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு - பேச்சுவார்த்தை தோல்வி
மதுரை: மதுரை அருகே உள்ள உத்தமபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை இடிப்பது தொடர்பாக நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தமபுரம் கிராமம். இங்கு 1989ம் ஆண்டு பெரும் ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தலித் மக்களும், பிற சமூகத்தினரும் பிரித்து வைக்கப்பட்டனர் - ஒரு சுற்றுச் சுவரால்.
ஜாதி துவேஷத்தை வளர்க்கும் இந்தச் சுவரை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அங்கு எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி சிலர் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். இதனால் மீண்டும் ஜாதிக் கலவரம் ஏற்படுமோ என்ற பீதி அங்கு எழுந்துள்ளது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஒரு தரப்பு திடீரென வெளிநடப்பு செய்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications