4 மலையாள நாளிதழ்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை
துபாய்: மலையாள மனோரமா, மத்யமம் உள்ளிட்ட நான்கு மலையாள தினசரிள் மற்றும் 2 உருது தினசரிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அச்சிட்டு பிரசுரிக்க அமீரக அரசு தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மலையாள மனோரமா, மத்யமம், சந்திரிகா, சீரஜ் ஆகிய நான்கு மலையாள தினசரிகள் வெளியாகின்றன. அதேபோல சில உருது இதழ்களும் வெளியாகி வருகின்றன.
ஆனால் இவற்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அச்சிட்டுப் பிரசுரிக்க உரிமம் தரப்படவில்லை. இதையடுத்து இந்தப் பத்திரிகைகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்தது. உரிய முறையில் உரிமம் பெற்று பிரசுரிக்குமாறு கூறி அதற்கு கால அவகாசமும் தரப்பட்டது.
ஆனால் மேற்கண்ட பத்திரிகைககள் அதுபோல செய்யவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மலையாள மனோரமா உள்ளிட்ட நான்கு மலையாள தினசரிகள், ஒரு உருது தினசரி, ஒரு உருது வார இதழ் ஆகியவற்றை அச்சிட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தடை விதித்தது.
அந்தப் பத்திரிகைகள் அல் குராயார் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருகின்றன. இனிமேல் இவற்றை அச்சிடக் கூடாது என அந்த அச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் இந்த இதழ்களை அச்சிடுவது நிறுத்தப்பட்டு விட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த இதழ்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கு அச்சிட அவர்களுக்கு உரிமம் தரப்படவில்லை. அதுதான் ஒரே பிரச்சினை என்று தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications