விைரவில் மகளிர் மசோதா நிறைவேறும்: மன்மோகன் சிங்
டெல்லி: நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும். இதுதொடர்பான நடைமுறைகள் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 1996ம் ஆண்டு முதல் கூறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும்போதும் இந்த தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படும்.
ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் சூடு பிடித்துள்ளது.
மசோதாவை நிறைவேற்ற எந்த நிபந்தனையுமின்றி ஆதரவு தருவதாக பாஜக ஏற்கனவே கூறியுள்ளது. மசோதாவை உடனே நிறைவேற்றும்படி இடதுசாரிகளும் வலியுறுத்தி வருகின்றன.
தற்போது நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்டம் நடந்து வருகிறது. 9ம் தேதி கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி.பர்தான், செயலாளர் டி.ராஜா மற்றும் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோர் பிரதமரை நேற்று சந்தித்தனர்.
பின்னர் பர்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் அதற்கான நடைமுறைகளை நாளை (இன்று) நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் தெரிவித்தார் என்று அவர் கூறினார்.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications