கல் குவாரியில் வெடிவிபத்து - ஒருவர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல் உடைக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே எலம்பலூர் - தன்னீர்பந்தல் கிராமத்தில் இன்று அதிகாலையில் இச்சம்பவம் நடந்தது. அங்குள்ள கல் உடைக்கும் தொழிற்சாலையில், இளையராஜா (25) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இளையராஜாவும், கல் உடைக்கும் நிறுவனத்தின் மேலாளர் முருகனும், அங்குள்ள அலுவலக அறையில் நேற்று இரவு தங்கினர். இன்று காலை அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
பாறைகளை உடைக்க வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தில் அவர்கள் இருவரும் தங்கியிருந்து கீற்றுக் கொட்டகை அலுவலகம் முழுவதும் தீக்கிரையாகி விட்டது. விபத்தில் படுகாயமடைந்த முருகன் மிகவும் ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த கல் உடைக்கும் தொழிற்சாலையை அதன் உரிமையாளர் தனபால் உரிமம் இல்லாமல் நடத்தி வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications