மதுரையில் அப்பள வியாபாரி கத்தியால் குத்திக் கொலை
மதுரை: மதுரையில் பணத்தைப் பறிக்க முயன்ற கும்பலிடமிருந்து தப்ப முயன்ற அப்பள வியாபாரியை, அக்கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு பணப் பையுடன் தப்பிச் சென்றது.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மதிமோகன் (48). அப்பள வியாபாரி. கும்பகோணம் சென்ற இவர், அங்குள்ள டீலர்களிடம் பணத்தை வசூலித்துக் கொண்டு மதுரை திரும்பினார்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து தெற்குவாசலுக்கு ஆட்டோவில் வந்தார். வழியில் திடீரென ஒரு கும்பல் வழிமறித்தது. ஆட்டோ டிரைவரும் அந்தக் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஆட்டோவை காந்தி மியூசியம் அருகே உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து மதிமோகன் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் பணம் அடங்கிய பையைப் பறிக்க முயன்றனர். ஆனால் அதை கொடுக்க மதிமோகன் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர்.
கழுத்து, நெஞ்சு, வயிற்றில் கத்திக் குத்துக் காயம் பட்ட மதிமோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மாநகராட்சி ஆணையர் வீடு அருகே உடலைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது அக்கும்பல்.
போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலைக் கும்பலைத் தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications