அதிக மாணவர் சேர்க்கை-மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
சென்னை: மெட்ரிகுலேசன் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அவர் அளித்த பதில்:
எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைகளைக் கூட சில பள்ளிகளில் பெயில் ஆக்குவதாக உறுப்பினர்கள் கூறினர்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் உள்ளது. அவ்வாறு பெயிலாக்கினால் அவர்களது மன பலம் பாதிக்கப்படும்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் பள்ளிகளில் இது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அரசின் அனுமதி பெறப்பட வேண்டும். சில பள்ளிகளில் குறிப்பிட்ட அளவு மாணவர்களை சேர்க்க அனுமதி பெற்று விட்டு அனுமதி பெறாமல் புதிய கிளைகளை தொடங்கி அதிக மாணவர்களை சேர்ப்பதாக இங்கு குற்றம் சாட்டப்பட்டது.
விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். பள்ளிக்கான அனுமதி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications