கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை பாதுகாக்க புதிய இயக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கிறிஸ்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக தமிழகம் மற்றும் புதுவையில் வாழ்வுரிமை இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்படுகிறது என கத்தோலிக்க மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் அவர் செய்தியார்களிடம் கூறியதாவது,

தமிழகம் மற்றும் புதுவையில் கிறிஸ்தவர்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வு இல்லை. அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தி நாட்டை தூண்டாட நினைத்து அரசியல்வாதிகள் மதவெறியை துண்டி விடுகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெயரில் முடிவெடுக்க, மக்களுக்காக சட்டம் இயற்ற, நீதி ஆதாரத்தை சேர்க்கவும், கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை இயக்கத்தை துவங்குகிறோம்.

இது அரசியல் கட்சிகள் போல் கிடையாது. இது ஒரு சமுக இயக்கம். இயக்கத்தின் பெயரில் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் இருந்தாலும் இது மத சார்பற்ற இயக்கம். இயக்கத்திற்காக தீபம் சின்னமும், சிகப்பு, வெள்ளை நிறத்தில் கொடியும் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் உரிமைகளை பாதுகாக்கவும், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தலை தடுக்கவும் பிரச்சனைகளை அடக்கு முறைகளை எதிர்த்து போராடவும் வளங்களை காக்கவும் துவக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா வரும் 11ம் தேதி நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 17 மறை மாவட்டங்களில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் இயக்கம் உதயமாகிறது. தூத்துக்குடியில் 1ம் கேட் பகுதியில் கொடியேற்றப்படுகிறது. நிர்வாகிகள், தலைவர்கள் ஒராண்டிற்கு பிறகு தேர்வு செய்யப்படுவர்.

தூத்துக்குடி மாவட்ட பொறுப்புகளை தற்காலிமாக பங்கு தந்தை ஜார்ஜ் வில்பர்ட் ஏற்றுக் கொண்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க, சிஎஸ்ஐ மற்றும் லுத்தரன் சபை சார்பில் துவக்கப்பட்டாலும் யாரும் உறுப்பினராக சேரலாம். பிஷப் போன்றோர் தலைவராக முடியாது. உறுப்பினராக இருக்கலாம் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+