பாளையில் ரூ.70 லட்சத்தில் புதிய விளையாட்டு விடுதி
நெல்லை: பாளையில் ரூ.70 லட்சம் செலவில் விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் கூறியதாவது, பாளை வஉசி மைதானத்தில் ரூ.10 லட்சத்தில் நவின உடற்பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.5 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்படும். இங்கு காலியாக உள்ள 85 சென்ட் நிலத்தில் ஸ்குவாஷ் உள்விளையாட்டு அரங்கு ரூ.6 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது. மேலும் கைப்பந்து, கூடைப்பந்து மைதானங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் செயற்கை புள்வெளியுடன் டென்னிஸ் மைதானமும் அமைக்கப்பட உள்ளது. விளையாட்டு விடுதியில் 75 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. எனவே ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும்.
தற்போது அண்ணா விளையாட்டரங்கில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஜிம்னாசியம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு 6 லட்சம் மதிப்பில் ஸ்கேட்டிங் ஆடுகளமும் அமைக்கப்படும். மேலப்பாளையம் அருகே கருங்குளத்தில் 30 லட்சத்தில் மினி ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது. இதில் தடகள ஒடுபாதை, கால்பந்து, கூடைபந்து, கைபந்து ஆடுகளங்கள் அமைக்கப்படும்.
சாய் சப் சென்டர் கன்னியாகுமரியில் அமைக்கும் திட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்தார். அதற்கு 35 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இடம் இல்லாததால் சாய் சப் சென்டர் நெல்லையில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்குளம் தாலுகா, மேக்கோடு கிராமத்தில் அறநிலையதுறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை மத்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு பின்னர் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications