வாசனை வரவேற்பதில் தகராறு-கோஷ்டி மோதல்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை வரவேற்பதில் அவரது ஆதரவு காங்கிரசாரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆண்டிமடத்தில் காங்கிரஸ் பிரமுகர் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் விருத்தாசலம் வழியாக வந்தார்.
அப்போது விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு ஜி.கே.வாசனுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் முன்னாள் எம்.பி.வள்ளல்பெருமான், கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் மகன் நீதிராஜன் மற்றும் காங்கிரசார் வரவேற்பு கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஜி.கே.வாசன் சென்றார். அவருடன் செல்வதில் காங்கிரசார் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஆண்டிமடத்துக்கு ஜி.கே.வாசன் புறப்பட்டு சென்றதும், தள்ளு, முள்ளு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
இந்த கோஷ்டி மோதலில் அசோக்குமாரின் ஆதரவாளரான இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அருள், விருத்தாசலம் வட்டார தலைவர் சிவபெருமாள் ஆகிய இருவரையும் நீதிராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அருளும், சிவபெருமாளும் காயம் அடைந்தனர். அவர்களை மற்ற காங்கிரசார் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தாக்குதலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் அசோக்குமார் தனது ஆதரவாளர்களுடன் விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்தத போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டோரை சமாதானம் செய்தனர். இதையடுத்து காங்கிரசார் மறியலை கைவிட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications