சொத்துக்காக பெண் அடித்துக் கொலை-உறவினர் உள்பட 4 பேர் கைது
சென்னை: சொத்துக்காக அத்தையை அடித்து கொலை செய்த வாலிபரையும், கூலிப் படையினரையும் போலீசார் 7 மணிநேரத்தில் கைது செய்தனர்.
சென்னை பூங்கா நகர் ரகுநாயக்கலு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் சாந்தி தேவி (57). இவரது கணவர் பவர்லால் ஜெயின், 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். சாந்தி தேவி தனியாக வசித்து வந்தார்.
இவருக்கு வாரிசு இல்லாததால், பலகோடி மதிப்பு சொத்துக்களை உறவினர்களுக்கு பிரித்து கொடுக்க திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் சாந்திதேவியை சந்திக்க அவரது கணவரின் தம்பி தேவிசந்த் நேற்று இரவு 8 மணிக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சமையலறையில் சாந்திதேவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தேவிசந்த் வடசென்னை இணை கமிஷனர் ரவி, துணை கமிஷனர் சம்பத் ஆகியோருக்கு தகவல் தந்தார். அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாந்தி தேவியின் வீட்டிற்கு சிலர் வந்து சென்றதாக குடியிருப்பு வாட்ச்மேன் தெரிவித்தார். இதையடுத்து அமைக்கப்பட்ட 7 தனிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
விசாரணையில் சாந்திதேவியின் சொத்துக்களை பெறுவதில் உறவினர்களுக்கிடையே போட்டா போட்டி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சாந்தி தேவியின் தம்பி மகன் அமீத்குமார் (20) கூலிப் படையுடன் சென்று சாந்திதேவியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை 3 மணி அளவில் மின்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் பதுங்கி இருந்த அமீத்குமார், கூலிப்படையினர் பிரகாஷ் (23), சேட்டன் (24), பணம் கொடுத்து உதவிய ராஜேஷ் (26) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அமீத்குமாரிடம் நடத்திய விசாரணையில் என் பெயரில் சொத்துக்களை எழுதி தருமாறு அத்தை சாந்தி தேவியிடம் பலமுறை கேட்டேன். ஆனால் அவர் மறுத்தார். இதையடுத்து கூலிப்படையுடன் சென்றேன். பால் காய்ச்சிக் கொண்டிருந்த அத்தையின் வாயை பொத்தி, கைகளை கட்டிப்போட்டு கையெழுத்து போடும்படி மிரட்டினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதனால் அவரை அடித்து கொலை செய்தோம் என்றார்.
சாந்தி தேவியின் வீட்டில் இருந்து இந்தக் கும்பல் அள்ளிச் சென்ற 13 பவன் நகைகளும் ரூ.21,000ம் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை குறித்த தகவலறிந்த 7 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கமிஷனர் நாஞ்சில் குமரன் பாராட்டினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications