துரைமுருகனின் 'லேகியப்' பேச்சு - சட்டசபையில் கலகலப்பு!
சென்னை: சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், சாலையோரம் லேகியம் விற்பவர் போல பல வகை நோய்கள் மற்றும் அதற்கான மருந்துகள் குறித்து நீட்டிப் பேசியதால் சட்டசபையில் கலகலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் நேற்று திருவண்ணாமலை எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி கேட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
அப்போது வேலூர் எம்.எல்.ஏ ஞானசேகரன் துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். குறிப்பிட்ட வகை எண்ணை, லேகியதத்தால் பித்த நரை, முடி உதிர்வது போன்றவை நிற்குமா என்றார் ஞானசேகரன்.
அப்போது எழுந்த அமைச்சர் துரைமுருகன், பிதாமகன் படத்தில் சூர்யா பல வகை நோய்களை நீட்டிப் பேசுவது போல, கர்ப்பசூடு, தலை சுற்றல், பொடுகு, மண்டக்குத்து, அஜீரணம், வாந்தி, பேதி, வாதம், கபம் என்று கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட நோய்களை வரிசையாகக் கூறினார்.
எல்லாவற்றையும் கூறி முடித்து கடைசியாக, புகையிலைப் பழக்கம் இல்லையென்றால் இவையெல்லாம் வராது என்று கூறி அமர்ந்தார். சாலையோர லேகிய வியாபாரி போல துரைமுருகன் பேசியது சபையில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications