பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு

சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கெனவே நுழைத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேர்ந்து படிக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் கடந்த 2006-07 கல்வியாண்டில் மாணவர்கள் சேராததால் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. இதேபோல் 2007-08ல் 14,721 இடங்கள் காலியாக இருந்தன.
இந்த ஆண்டு அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தாண்டு முதல் பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சமாக பொதுப்பிரிவினர் பெறவேண்டிய மதிப்பெண்களான 60 சதவீதம் 55 சதவீதகமாகக் குறைக்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கு 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும், மிகவும் பிற்பட்ட மற்றும் சீர் மரபினருக்கு 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது.
இதன்மூலம் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் பொன்முடி.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications