மதிமுக-15: வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து!
சென்னை: மதிமுகவின் 15வது ஆண்டு விழாவையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
கால ஓட்டத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் கரைந்து போகாமலும், சுய முகத்தை இழக்காமலும், தான் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை புத்துருவாக்கம் செய்யும் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. 15ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மதிமுகவை இரும்புக் கோட்டையாக நிர்மாணிப்பதற்கான லட்சியப் பயணத்தில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, துரோகங்களை தூள் தூளாக்கி, நிகழ்கால கோளாறுகளை சரி செய்து, எதிர்கால வரலாற்றை உருவாக்குவதில் அதன் பொதுச்செயலாளராகிய தங்களது பணி அளப்பரியது.
தங்களது பயணத்தில் அதிகார வர்க்கம் போடும் பரமபத அரசியல் சித்து விளையாட்டுகளை முறியடித்து வெற்றிச் சங்கொலி திக்கெட்டும் முழங்க, தங்களுக்கும் மதிமுகவிற்கும் எனது இதயப்பூர்வமான நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications