மணலில் புதைத்து கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:மணலில் பதுக்கி கேரளாவுக்கு கடத்த முயன்ற 100 மூட்டை ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க கலெக்டர் ஜோதி நிர்மலா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சில்வெஸ்டர், தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. இந்த பறக்கும்படையினர் இன்று நாகர்கோவில் அடுத்த சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையி்ல் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரியை சைகை செய்து நிறுத்தினர்.

போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர், கிளினர் ஆகியோர் சிறிது தூரத்திலேயே லாரியை நிறுத்திவிட்டு ரோட்டோரத்தில் இருந்த புதருக்குள் விழுந்து தப்பியோடி விட்டனர்.

லாரியை சோதனை செய்தபோது அதில் மணல் நிரம்பியிருந்தது. இருப்பினும் டிரைவரும், கிளினரும் தப்பியோடியதால் சந்தேகத்தின்பேரில் மணலை போலீசார் தோண்டி பார்த்தனர். அப்போது மணலுக்கு அடியி்ல் பெரிய தார்ப்பாய் விரிக்கப்பட்டு அதன் கீழே 100 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+