'மின்வெட்டால் கோவையில் பஞ்சாலைகள் மூடப்படும் அபாயம்'
சென்னை: மின்தட்டுப்பாடு, கச்சாப் பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணங்களால் கோவையில் 30 சதவீத பஞ்சாலைகள் மூடக்கூடிய அபாய நிலையில் இருப்பதாக அதிமுக எம்எல்ஏ வேலுச்சாமி தெரிவித்தார்.
சட்டசபையில் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் உள்பட கோவையில் சிறியதும் பெரியதுமாக 3000 பஞ்சாலைகள் உள்ளன.
செயற்கையாக ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு, கச்சா பொருள்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், வங்கி மானியம் கிடைக்காதது போன்ற காரணங்களால் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கிய கோவை பஞ்சாலைகள், பனியன் தொழிற்சாலைகள், விசைத்தறிகள், பம்பு செட் தொழிற்சாலைகள் நலிவடைந்து வருகின்றன.
சில குறிப்பிட்ட தொழில்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க முடியும். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முக்கியத்தவம் கொடுக்கும் அரசு ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளுக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். புதிய தொழிற்சாலைகளுக்கு சுமார் 1000 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
விசைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் 3 முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது. நவீன விசைத்தறிக்கான நாடா வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. பல்லடத்தில் நவீன விசைத்தறி பூங்கா அமைக்க அதிமுக ஆட்சியில் ரூ.4.87 கோடி ஒதுக்கப்பட்டது.
திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் ரூ.8000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை ஏற்றுமதி செய்தன. மின் தட்டுப்பாடு, டாலர் வீழ்ச்சி, மானியம் இல்லாத காரணங்களால் இப்போது ரூ.1500 கோடிக்கு கூட ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications