புஷ் மூத்த மகள் திருமணம்-காதலனை மணக்கிறார்
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மூத்த மகள் ஜென்னாவுக்கும் ஹென்றி ஹேகர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கேம்ப்டேவிட் ஓய்விடத்தில் அதிபர் புஷ் தனது மனைவி லாராவுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ஹென்றி ஹேகர் நேரில் சென்று ஜென்னாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினார்.
வழக்கமான தந்தைகள் போல அப்போதைக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார் புஷ். பின்னர் மகள் ஜென்னாவின் கருத்தை அறிந்து காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினார். திருமண ஏற்பாடுகளையும் செய்தார்.
வருகிற சனிக்கிழமை (10ம் தேதி) அன்று டெக்சாஸ் நகரில் கிராஃபோர்டு என்ற இடத்தில் உள்ள மிகப் பெரிய பண்ணை வீட்டில் இந்த திருமணம் விமரிசையாக நடைபெறுகிறது. இதற்காக அந்த பண்ணை வீடு விழாக் கோலம் பூண்டுள்ளது.
திருமணத்தின்போது மணமகள் ஜென்னா, ஆஸ்கார் டி லா ரென்டா கவுன் அணிய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முக்கியமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
மணமகளுக்கு தோழிகளாக 14 பேர் இடம் பெறுகிறார்கள். அவர்களில் ஜென்னாவின் தங்கை பார்பரா புஷ்ஷும் ஒருவர். திருமண மோதிரத்தை தேர்ந்தெடுக்க ஹேகருக்கு ரொம்ப உதவியாக இருந்தாராம் 'நாத்தனார்' பார்பரா.
அந்த மோதிரத்தில் ஹேகர் குடும்பத்தின் பரம்பரை வைரக்கல்லுடன் நீலக்கற்களும் இடம்பெற்றுள்ளன.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு













Click it and Unblock the Notifications