நாளை பிளஸ்டூ முடிவுகள்-'தட்ஸ்தமிழில்' பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

Thangam
சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நாளை (9ம் தேதி) வெளியாகின்றன. இந்த முடிவுகளை தட்ஸ்தமிழ்.காம் இணைய தளத்தில் காணலாம்.

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை பிளஸ்டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 பேர் எழுதினர்.

பல்வேறு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. அதன் பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இந்த மாதம் 2வது வாரத்திற்குள் வெளியாகும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

ஆனால் முன்கூட்டியே வருகிற 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு மே 14ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு அதை விட முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி காலை 9 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை மாணவ, மாணவியர் தங்களது பள்ளிகளில் பார்த்துத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

உங்கள் தட்ஸ்தமிழ்.காம் இணைய தளத்திலும் நாளை காலை தேர்வு முடிவுகளை காணலாம்.

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்கள்:

www.thatstamil.in
www.oneindia.com
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+