கடலூரில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்-மக்கள் பீதி
கடலூர்: கடலூரில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவர்கள் உள்பட மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
தமிழக கடல் பகுதிகளில் வழக்கத்திற்கு விரோதமாக பல்வேறு இயற்கைச் சீற்றங்கள், கடல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு மீனவர்களை வதைத்து வருகின்றன. அடிக்கடி கடல் கொந்தளிப்பு, அவ்வப்போது கடல் நீர் உள்வாங்குதல், ஊருக்குள் புகுதல் போன்றவை சகஜமான நிகழ்வுகளாகி விட்டன.
நர்கீஸ் புயலால் தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலவி வந்தது. ராமேஸ்வரம், பாம்பன், கன்னியாகுமரி, கடலூர், நாகை, சென்னை ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருந்தது.
குறிப்பாக கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினம், எம்.ஜி.ஆர். திட்டு, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், தாழங்குடா, கடலூர் ஆகிய பகுதிகளில் கடல் அலைகள் ராட்சத அளவுக்கு எழுந்து மீனவர்களை மிரட்டி வந்தது.
ஆனால், நர்கீஸ் புயல் மியான்மரை நோக்கி போனதும் இந்த சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது.
இருப்பினும் நேற்று தேவனாம்பட்டினத்தில் திடீரென கடல் நீர் 30 மீட்டர் அளவுக்கு ஊருக்குள் புகுந்ததால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் பீதியடைந்தனர். பயந்து போய் ஓட்டம் பிடித்தனர்.
கடற்கரையில் மேடான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோடியம் ஆவி விளக்கின் கம்பம் உள்ள மண் பகுதி அரிக்கப்பட்டதால் மின் கம்பம் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் இப்பகுதி மீனவர்களிடையே பெரும் பீதியும், அச்சமும் நிலவுகிறது. மேலும் இப்பகுதி சுனாமிக்கு பெரும் சேதத்தை சந்தித்ததால் அதேபோன்ற பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் மீனவர்கள் மத்தியில் உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications