செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் ரெய்டு! கரூரில் எம்.சி.சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கரின் கரூர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்.சி. சங்கரின் வீடு உட்பட நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

karur senthil balaji

அதுபோல் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அருணை குழுமத்தின் வளாகத்தில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது கல்லூரி வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படாததால் உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது போல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சத்யா நகரைச் சேர்ந்த ராஜசேகரனின் மகன் கண்ணன், மதுரை நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் இன்று 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 5 மணி முதலே
சோதனை நடத்தினர்.

இந்த சோதனை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மீது கமிஷன் மற்றும் பணி நியமன முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் இவர் தற்போது கரூரில் வசித்து வருகிறார் இவர் சொந்த ஊரான நத்தத்தில் அவரது பெற்றோரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர் வீட்டில் இல்லை. மதுரையில் வேலை செய்து வருகிறார்.

கரூர் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் என்பவர் வீட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் பண்ணை வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+