விஜய்க்காக மகன் எடுத்த முடிவு.. அப்போ போட்டி எல்லாம் இல்லையா? முடிவுக்கு வரும் பஞ்சாயத்து!
சென்னை: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் தகவல் வெளியானதும் ரசிகர்கள் அவருடைய மகன் படத்தைப் பற்றி தான் பேச தொடங்கி இருக்கின்றனர். அப்பாவின் கடைசி படமும், மகனின் முதல் படமும் ஒரே நேரத்தில் வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இப்போது ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்த ஒரு வாரத்தில் அதாவது ஜூலை 31ஆம் தேதி ஜோசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தை வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது . இது குறித்து கூட சில போஸ்டர்களும் வெளியானது . இதனால் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் விஜய்யின் கடைசி படத்தை கொண்டாடி முடிப்பதற்குள் அவருடைய மகன் இயக்குனராக அறிமுகமான முதல் படத்தை ரசிகர்கள் வரவேற்க ரெடியாகவும் இருந்தனர்.
ஆனால் இப்பொழுது ஒரு வார இடைவெளி தான் சிக்மா படத்துக்கு சிக்கலாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல சென்சார் பிரச்சனையால் ஜனநாயகன் படம் வெளியாவது தள்ளி போய் இப்போது. ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் காட்சிகள் சோசியல் மீடியாவில் கசிந்துவிட்டது. அப்போது விஜய் ரசிகர்களுக்கு பலருக்கும் அதிர்ச்சி தான்.

ஜனநாயகன் சிக்மா மோதல்
ஆனாலும் இந்த படம் தியேட்டரில் வந்த பிறகு நாங்கள் திருவிழா போல கொண்டாடுவோம், காரணம் விஜய் அரசியலுக்கு போன பிறகு நடித்த கடைசி படம் என்பதால் இதுதான் எங்களுக்கு உண்மையான திருவிழா... இந்த படம் வெளியாகும் நாள் தான் எங்களுக்கு பொங்கல் என்றெல்லாம் பலரும் சொல்லி வந்தனர். அதே நேரத்தில் விஜய்யின் மகன் படம் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படத்திற்கு ஆதரவு கொடுப்பார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
தள்ளிப்போகும் சினிமா சிக்மா
இதனால் ஜோசன் படம் தள்ளி போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைக் கேட்டதும் ரசிகர்கள் அப்பாவுக்காக மகன் எடுத்த முடிவா? இது என்றும் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே இது போன்ற பெரிய நடிகர்கள் படத்துடன் மற்ற நடிகர்கள் படத்தை வெளியிடுவதற்கு ரொம்பவும் தயங்குவார்கள். சில நேரங்களில் அந்த நடிகர்களின் படங்கள் எடுபடாமல் போனால் சின்ன படங்கள் கூட வெற்றி பெற்று இருக்கிறது.
விஜய் மகன் அடுத்த முடிவு
ஆனால் ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் சென்டிமென்டாகவே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் அந்த படத்துடன் மோத வேண்டாம் என்று இப்போது மகன் ஜோசன் முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அவருடைய தனி முடிவாக இருக்காது எப்படின்னு தயாரிப்பாளர் தரப்பில் என்ன சொல்கிறார்களோ அதைத்தானே அவரும் செய்ய முடியும் என்றும் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications