கர்நாடகம்: யாருக்கு ஓட்டு- தமிழர்களுக்கு ரஜினி 'அட்வைஸ்'
பெங்களூர்: கர்நாடக தமிழர்களுக்கு ஆதரவான தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்களிக்குமாறு அம் மாநில தமிழர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்னை தொடர்பாக சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடகா தமிழர்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசினார்.
இதற்கு நன்றி தெரிவித்து கர்நாடக தமிழர் சங்கம் ரஜினிகாந்த்துக்கு கடிதம் எழுதி இருந்தது. இதையடுத்து கர்நாடக தமிழர் சங்கத் தலைவர் ராசு மாறனுக்கு ரஜினி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் ரஜினி கூறியதாவது:
தங்களுடைய கடிதம் எனக்கு தாமதமாக கிடைத்தது. நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும், பாசத்துக்கும், அக்கரைக்கும் நான் தலைவணங்கி என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய நன்மைக்கும், பாதுகாப்புக்கும் குரல் கொடுக்கிற தலைவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தேர்தலில் ஜெயிக்கவும், புகழோடு வாழவும் பாடுபடுங்கள்.
அப்போதுதான் உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.
மற்றும் உங்கள் குடும்பம், தாய், தகப்பனார், நல்ல நண்பர்களை கவனிப்பது உங்கள் முதல் கடமையாக இருக்கட்டும். வாழ்க தமிழ் மக்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் ரஜினி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications