கொலை வழக்கில் விடுதலை- கண் கலங்கிய அழகிரி
சித்தூர்: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா அரசால் போடப்பட்ட (தா.கி. கொலை) வழக்கு, திமுக மீது தொடரப்பட்ட வழக்காகவே நான் கருதுகிறேன் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் விடுதலையானவுடன் சித்தூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தைவிட்டு தொண்டர்கள் படைசூழ தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி வெளியேறினார்.
அப்போது அவரை மறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்கையில் அழகிரி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா அரசால் போடப்பட்ட இந்த வழக்கை திமுக மீது போடப்பட்ட வழக்காகவே கருதுகிறேன். 13 பேரின் விடுதலைக்காக வாதாடிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்திய தண்டனை சட்டம் விதி 302 (கொலை செய்தல்) மற்றும் 120-பி (சதி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அழகிரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் குற்றச்சாட்டுக்களை போலீசார் சரிவர நிரூபிக்கவில்லையென்பதால் இந்த வழக்கில் இருந்து அழகிரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆங்கிலத்தில் இருந்த தீர்ப்பை நீதிபதி துர்காபிரசாத் சுருக்கமாக 5 நிமிடங்களில் அறிவித்துவிட்டு வெளியேறினார். தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியில் அழகிரி கண் கலங்கினார். மற்றொரு குற்றவாளியான மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் அழுதுவிட்டார்.
அழகிரியின் உறவினர்களான முரசொலி அமிர்தம், மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேஷ், மகன் துரை தயாநிதி ஆகியோரும் நீதிமன்றம் வந்திருந்தனர்.
அழகிரி விடுதலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் நீதிமன்றத்துக்கு வெளியே இருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர். இனிப்புகளை வழங்கினர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications